Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா சமூகசேவைகள் திணைக்களத்தில நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
உயிரிழை என்ற அமைப்பின் ஊடாக இப்பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் வுவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களைச் சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன், 'போரில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பாக உயிரிழை வடமாகாணத்தில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் 2010ஆம் ஆண்டளவில் உயிரிழை அமைப்பை உருவாக்கும் திட்டம் வவுனியா பொதுவைத்தியசாலை வைத்திய நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை புலம்பெயர் சமூகத்தவர்களின் நிதியுதவி இவ்வமைப்புக்கு கிடைத்துவருவதாக குறிப்பிட்ட அவர், சமூகசேவை உத்தியோகத்தர்கள் அரச அதிகாரிகள் இவ்வமைப்புக்கு உதவத்தயாராய் உள்ளதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago