Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டதில் உள்ள உடையார்கட்டு பாடசாலையை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்திற்காக ஜப்பான் அமெரிக்க டொலர் 215,866 ஐ வழங்கியுள்ளது.
ஜப்பான் அரசாங்கம் அமெரிக்கன் டொலர் 215,866 (28 மில்லியன் இலங்கை ரூபாயை) 'முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாடசாலை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கான' உதவித் தொகையாக, தனது தூதரகத்தின் அடிமட்ட மனித பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
'முல்லைத்தீவு மாவட்டதில் உள்ள உடையார்கட்டு பாடசாலையை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமானது' சர்வதேச சேவ் த சில்ரன் நிறுவனத்தினால்; ,மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும். பொருத்தமான சூழ்நிலையில் கல்வியைப் பெறுவதன் ஊடாக சிறுவர் உரிமையை யதார்த்தமாக்குவதே, பாடசாலைக் கட்டடத்தை நிர்மாணிப்பதான இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உடையார்கட்டு பாடசாலை தற்போது 529 மாணவர்களுடன் 5 வகுப்பறைகளை மாத்திரம் கொண்டுள்ள ஒரு தனிக்கடடடம். ஏனைய 13 வகுப்பறைகளும் ஒலைக்கூரைகளையும், தகரத்தால் சுவர் எழுப்பப்பட்டதும், பாதி சீமேந்து பூசப்பட்டதுமான தரையைக் கொண்டுள்ள ஒரு தற்காலிக கொட்டகையாகும்.
ஆகையால் ஜப்பான் அரசாங்கம் வழங்கும் இந்த உதவித் தொகையைக் கொண்டு சர்வதேச சேவ் த சில்ரன் நிறுவனம் 14 வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டடத்தை நிர்மாணிக்கும். இது போதிய கற்றல் வசதிகள் கொண்டதான நிரந்தர வகுப்பறைகளாக அமைந்து மாணவர்கள் கற்பதற்கு உதவியாக அமையும்.
ஜப்பான் இந்த வேலைத்திட்டத்திற்கான உதவியை ஸ்ரீ லங்கா நாட்டுக்கு உதவுகின்ற கொள்கைக்கு உரிய ஸ்தானமளித்து 'தோன்றுகின்ற பிரதேசங்களின் அபிவிருத்தி' என்பதை மையப்படுத்தியே வழங்குகிறது. வறுமைக்கோட்டுக்குள் வாழும் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் மீளக்கொண்டு வருவதானது,
மீள்கட்டுமான புனரமைப்புக்களைச் செய்தல் போன்ற சக பிரச்சினைகளை தீர்ப்பதனால் பூரணத்துவம் அடைவதாக அமைகிறது என ஜப்பான் அரசாங்கம் நம்புகிறது. இந்த நிலையில் ஒன்றிணைந்த அணுகுமுறையானது, நீண்டகால ஓட்டத்தில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஒருமைப்பாட்டிற்கும்;, நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கும், உள்ளக அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.
சர்வதேச சேவ் த சில்ரன் நிறுவனத்தின் நாட்டு ,யக்குனர் திரு. வில்லியம் லிஞ்ச் அவர்கள் - ' இந்த உதவித் தொகையானது ஜப்பான் நாட்டின் அரசுடனும், மக்களுடனும் ,ணைந்து பல வருடங்களைத் தாண்டி, சிறுவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புத்துணர்ச்சி தரும் ஒரு சந்தர்ப்பமாக பங்காளருக்கு இது அமைகிறது' என்று கூறினார். ஜப்பான் நாட்டின் தூதரகத்துடன் பணியாற்றுவதற்காகக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக நாங்கள் மிக நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம்.
இந்த உதவித்தொகைக்கான ஒப்பந்தமானது ஜப்பான் நாட்டின் தூதுவர் மேதகு திருவாளர். நோபுஹிட்டோ ஹோபோ என்பவருக்கும் சர்வதேச சேவ் த சில்ரன் நிறுவனத்தின் நாட்டு இயக்குனர் திரு. வில்லியம் லிஞ்ச் என்பவருக்கும் இடையில் தூதுவரின் கொழும்பிலுள்ள வதிவிடத்தில் 2015ம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி கையொப்பம் இடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
6 hours ago
6 hours ago