2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச. பஸ் சாரதி மீது தனியார் பஸ் சாரதி தாக்குதல்

George   / 2015 பெப்ரவரி 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தனியார் பஸ் சாரதி, சனிக்கிழமை (21) தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலிருந்து உருத்திரபுரத்துக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, உருத்திரபுரத்தில் இடைமறித்த தனியார் பஸ் சாரதி, பேருந்துக்குள் ஏறி இ.போ.ச சாரதி மீது தாக்குதல் நடத்தியதுடன் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸின் திறப்பையும் எடுத்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .