2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஐ.தே.க. வேட்பாளர்களை ஹூனைஸ் பாரூக் சந்தித்து கலந்துரையாடினார்

Sudharshini   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க வேட்பாளர்களை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. வன்னி பிரதான அமைப்பாளருமான ஹூனைஸ் பாரூக் சனிக்கிழமை(21) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பில் நாடாhளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியதுடன், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள குறித்தும் தெளிவுபடுத்தினர்.

இம்மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதுக்கும் வாக்குகளை அதிகரிப்பதுக்கும் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக வேட்பாளர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .