2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவு உள்ளுராட்சி மன்றங்களுககான தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

Kogilavani   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஷ்ணகுமார்


எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


11 ஆசனங்களைக் கொண்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் 29,279 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 9 ஆசனங்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 23,559 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கரைதுறைபற்றில் 50 வாக்களிப்பு நிலையங்களும், புதுக்குடியிருப்பில் 45 வாக்களிப்பு நிலையங்களும் என 95 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 6 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.


வன்னியின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் மீள்குடியேற்றங்களை காரணம் காட்டி இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.


இந்த நிலையில் பெப்ரவரி 28ஆம் திகதியன்று இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .