Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு வரும்போது புலனாய்வு பிரிவினர், அவர்களை பின்தொடர்ந்து வருவதாக வன்னி நாடாhளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (22) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்;ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினத்தவர்களான தமிழினத்தின் ஆணையை பெற்ற மைத்திரிபால சிறிசேன, ஆட்சி அதிகாரத்தினையும் பெற்றுக்கொண்டார்.
அது மட்டுமன்றி நல்லாட்சி நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக நூறுநாள் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில் இந்த நாட்டில் மூன்று தசாப்தத்துக்கும் மேலாக காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் தமது நிலபுலங்களை கைவிட்டு உறவுகளை பிரிந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளாக சித்தரித்துடன் அவர்கள் நாட்டுக்குள் வருகை தருவதுக்கும் பல்வேறு தடைகளை விதித்திருந்தது.
மேலும் நாட்டுக்குள் வரும் புலம்பெயர் தமிழர்களை விசாரணை செய்தல், புலனாய்வு பிரிவினர் பின்தொடர்தல்; என பல அச்சுறுத்தல்கள் இடம்பெற்றன. அத்துடன் வடக்கு கிழக்கில் வாழும் புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் கூட விசாரணை என்ற பெயரில் கடுமையாக நெருக்கடிக்குட்படுத்தப்பட்டனர். குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் தமது உறவினர்களின் இறுதிச்சடங்குளில் கூட பங்கேற்க முடியாத நிலைமையொன்று காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிய அரசாங்கம், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் நாடுத்திரும்பவேண்டும் எனவும் புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும்; அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது. அத்துடன் இந்திய அகதி முகாம்களிலுள்ள மக்கள் மீண்டும் குடியேற்றப்படுவார்கள் எனவும் கூறியிருந்தது.
அரசாங்கத்தின் இவ்வறிவிப்பை அடுத்து, வடகிழக்கிலிருந்து அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் தற்போது நாட்டில் சுமுகாமான ஒரு அரசியல் களநிலைமைகள் ஏற்பட்டுள்ளன எனக் கருதி மீண்டும் சொந்த இடங்கள், நண்பர்கள், உறவினர்களை பார்வையிடுவதுக்காக வருகை தர ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அவ்வாறிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி அமையப்பெற்ற பின்னரும் மீண்டும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்தவண்ணமேயுள்ளமை துரதிஷ்டமாகும். வடகிழக்கைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததும் பல மணி நேர விசாரணைக்கு பின்னர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். விசாரணையின் பின் விடுவிக்கப்படுபவர்கள் செல்லும் இடமெல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலைமையை கவனத்தில் கொண்டு இலங்கைக்கு வரும் புலம்பெயர்ந்த உறவுகள்; சுமுகமான நிலைமை ஏற்படும்வரை நாடு திரும்புவதைத் தவிர்த்துகொள்ளும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சுதந்திரமும் பாதுகாப்பும் அச்சமற்ற நிலைமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். இருந்தபோதும் இவ்வாறான செயற்பாடுகள் அந்த நம்பிகையை பாரிய கேள்விக்குறியாக்கியுள்ளன.
ஜனாபதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாய்நாட்டிற்கு வரும் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் இராணுவக் கெடுபிடிகளை நீக்கி, நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவடன் அவர்கள் முதலீடுகளைச் செய்வதற்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதயசுத்தியுடன் கூடிய நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்டி, அரசியல் தீர்வை காண்பதற்கு வழியமைக்க வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதைக் கைவிடவேண்டும். தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்த வேண்டாம் என புதிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago