2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலும் முறைக்கேடு

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

இந்திய வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக   வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர்,  மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 
'வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசினாலும் வேறு சர்வதேச நிறுவனங்களினாலும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டது தாங்கள் அறிந்ததே.

எனினும் துரதிஷ்ட வசமாக கடந்த அரசில் அங்கம் வகித்த வன்னிமாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய அமைச்சரின் அதீத அரசியல் தலையீட்டின் நிமித்தம் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் சென்றடையவில்லை.

மாறாக அமைச்சரினால் நியமிக்கப்பட்ட உள்ளுர் பிரதிநிதிகளின் தலையீட்டினால் பயனாளிகள் தெரிவு பக்கச்சார்பாக நடைபெற்றுள்ளது.

குறிப்பாக இந்திய அரசின் உதவியுடனான வீட்டுத்திட்டத்தில் கட்டம்-I 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கட்டம்-II, கட்டம்-III என நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான வீடுகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது..

தமிழர்கள்         83.2 வீதமாகவும்,
இஸ்லாமியர்கள்     10 வீதமாகவும்
சிங்களவர்கள்     6.8 வீதமாகவும் உள்ளனர்

இவர்களில் மீளக்குடியமர்ந்த, வீடுவழங்குவற்கு பிரதேச செயலகத்தினால் இனங்காணப்பட்ட பயனாளிகள்
தமிழர்         10,209
இஸ்லாமியர்         1,483
சிங்களவர்         773

ஆனாலும் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதோ.
தமிழர்          1,938
இஸ்லாமியர்         1,634
சிங்களவர்        545

இந்தவகையில்     
83.2 வீதமாவுள்ள தமிழர்களுக்கு 18.9 வீதமும்
10 வீதமாகவுள்ள இஸ்லாமியர்களுக்கு 110.1 வீதமும்
6.8 வீதமாகவுள்ள சிங்களவர்களுக்கு 70.5 வீதமும் வழங்கப்பட்டுள்ளது.


தற்போது கட்டம்-ஐஐஐ இற்கான பயனாளிகள் கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் வீடுகள் வழங்கப்படுவதற்கான ஆயத்தவேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்களால் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எதி;ரவரும் காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறாது இருக்க எனது அமைச்சினால் பிரேரிக்கப்படுகின்ற பிரதிநிதிகளை வடக்கின் 5 மாவட்டங்களிலும் நடைபெறும் பயனாளிகள் தெரிவில் பார்வையாளர்களாக அல்லது கண்காணிப்பாளர்களாக செயற்படுவதற்கு ஆவன செய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்வதோடு இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு அறுவுறுத்தல் வழங்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்' என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .