2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தக நிலையங்களால் இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், அரச பேரூந்து தரிப்பிடப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளமையினால் பொதுமக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இவ்விடையம் தொடர்பில் பல தடவைகள் எடுத்துக்கூறியும் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக நடைபாதை வியாபாரிகள் மக்கள் நடந்து செல்லுகின்ற பாதைகளில் தமது வியாபாரப்பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அது மட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவுக்கு மேலாக தமது வர்த்தக நிலையங்களை விஸ்தரிப்பு செய்துள்ளதுடன் தமது கடைகளுக்கு முன்பாக பொருட்களை வைத்து பாதசாரிகளுக்கு தொடர்ந்தும் இடையூரை ஏற்படுத்தி வருகின்றனர்.

இச்செயற்பாடுகளினால் நாளாந்தம் பஸ் தரிப்பிடத்துக்கு வரும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

மக்களின் பிரச்சினைகள் குறித்த வர்த்தகர்களுக்கு மன்னார் நகர சபை பல ஆலோசனைகளை வழங்கியும் அவர்கள் எமது ஆலோசனைகளை உதாசீனம் செய்து தொடர்ந்தும் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, இச்செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் பொதுமக்களின் நன்மை கருதி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .