2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய றோலர்களை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

George   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய றோலர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களை முற்றாக கட்டுப்படுத்துமாறு, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், நாகலிங்கம்  வேதநாயகனிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் அத்துமீறல், தினமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை கடற்படையினர் இதற்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர்.

இதேவேளை கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளில் பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள்  மீன் பிடிக்கின்றனர். இதன் காரணமாக மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடலட்டைத் தொழிலை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கடற்றொழிலாளர்கள் இதன்போது, முன்வைத்தனர்.

மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் அத்துமீறிய மீன்பிடிகளை கட்டுப்படுத்துவதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் பெறப்படும். பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நந்திக்கடல் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத கடற்றொழில் கட்டுப்படுத்தப்படும்.

முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தில் காணப்படும் ஆளணி நெருக்கடி காரணமாக சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கையெடுப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.

நந்திக்கடலில் சட்டவிரோத கடற்றொழிலைக் கட்டுப்படுத்துவதற்கான திடீர் பரிசோதனைகள் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .