2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லை. கடற்றொழிலாளர்கள் உயிர்காப்பு அங்கிகளை அணிவது அவசியம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லும்போது, உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணியுமாறு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் புதன்கிழமை (25) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளனர்.  இவர்களுக்கு உயிர் பாதுகாப்பு அங்கிகள்  கடற்றொழில் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.

இருந்தும், கடற்றொழிலாளர்கள் அங்கிகளை அணியாமல் கடற்றொழிலுக்கு செல்கின்றனர். அங்கிகளை அணியாது தொழில் செய்யும் கடற்றொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .