2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், எமிழ்நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணொருவருடைய சடலத்தை செவ்வாய்க்கிழமை (24) மீட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார், சின்னக்கடை பகுதியை வதிவிடமாக கொண்ட செபஸ்தியான் திரேசா (வயது 65) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், எமிழ்நகர் பகுதியில் தமது உறவினர்களுடன் வசித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, அந்த உறவினரின் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.  இவருக்கு ஒரு கால் இயலாத நிலையில் கம்பு ஊன்றியே சென்றுள்ளார்.

வெளியில் சென்ற அப்பெண் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த பாழடைந்த வீட்டிலிருந்து எரியுண்ட நிலையில் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலத்து அருகில் மண்ணெண்ணை போத்தலொன்றும் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .