2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஓமந்தை விபத்தில் எழுவர் காயம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மதவாச்சியில் குடைசாய்ந்த பாரவூர்தியொன்றை மீட்பதற்காகச் சென்று திரும்பிய குழுவினரின் வான், ஓமந்தையில் வியாழக்கிழமை (26) காலையில் விபத்துக்குள்ளாகியதில் 7பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள், யாழ். போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் வைத்தியசாலை மற்றும் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் இருந்து மதவாச்சிக்கு எரு ஏற்றிக்கொண்டு வருவதற்காக சென்றிருந்த பாரவூர்தியொன்றே அங்கு குடைசாய்ந்தது.

அதனை  மீட்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வான் ஒன்றில் சென்ற குழுவினர், பாரவூர்தியை மீட்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்புகையில் அவர்கள் பயணித்த வான், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .