2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் கிராமங்களின் விபரம் சேகரிப்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை சமுர்த்தி திட்டத்தின் கீழ் கிராமங்கள் தொடர்பான விபரக்கொத்து திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 325 கிராமங்களுக்கும் தனித்தனியாக இந்த விபரத்திரட்டு தயாரிக்கப்படவுள்ளது.

கிராம அலுவலர், வாழ்வின் எழுச்சி திணைக்கள கிராம மட்ட உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிக்கள உத்தியோகஸ்தர், உள்ளிட்ட 6பேர் கொண்ட குழுவினர்  ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த விபரத்திரட்டு தயாரிப்புக்கு பொறுப்பாகவுள்ளனர்.

இந்த விபரத்திரட்டு மூலமாக கிராமங்களின் அபிவிருத்திக்கு தேவையான மூலோபாயங்களை வகுக்க முடியும். சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை மீளாய்வு செய்யும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலமாக 1 இலட்சம் ரூபாய் வீட்டுக்கடன் மிகக்குறைந்தளவு வட்டியில் வழங்கப்படவுள்ளது. அதற்கான பயனாளிகளைத் தெரியும் பணிகளும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .