2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் பகுதிக்குள் வியாழக்கிழமை (26) இரவு புகுந்த யானைகள் பயன்தரு மரங்களை அழித்துள்ளதாக அப்பிரதேச கிராம அலுவலர் தெரிவித்தார்.

15க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள், வாழைகள், மற்றும் வீட்டுப்பயிர்களையும் யானைகள் நாசம் செய்துள்ளன.

அதுமட்டுமல்லாது ஒரு வீட்டில் கொட்டகைக்குள் வைக்கப்பட்டிருந்த நெல்லை உண்ணும் பொருட்டு, கொட்டகையின் கூரையை பிடிங்கி எறிந்துள்ளது. ஊரவர்கள் இணைந்து யானையை விரட்டியதால் சேமித்து வைத்திருந்த நெல் தப்பியது.

வன்னேரிக்குளம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக யானைகள் ஊர் மனைக்கு வருவதில்லை எனவும், தற்போது தான் வந்துள்ளதாகவும் கிராம அலுவலர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .