2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை

Sudharshini   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல்லை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, அதிகாரிகளுக்கு  பணிப்புரை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சிக்கு  விஜயமொன்றை மேற்கொண்டு, அம்பாள்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற தம்புள்ள மாதிரியிலான பொருளாதார மத்திய நிலையத்தினை வெள்ளிக்கிழமை (27) பார்வையிட்டார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நெல் கொள்வனவு நடவடிக்கைகளை மேலும் இலகுப்படுத்தி அனைத்து விவசாயிகளும் நன்மை பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு நடவடிக்கைகள்  இங்குள்ள கூட்டுறவு அமைப்புகள் மூலமும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவ்வருடம் அவ்வாறு இடம்பெறாமையினால் பல விவசாயிகள் நியாய விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து அமைச்சர், அதிகாரிகளிடம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2014 காலபோக நெற்செய்கையின் அறுவடையானது அண்ணளவாக 96 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்ட போதும், தனியே நெல் சந்தைப்படுத்தல் சபையானது ஒரு விவசாயிடமிருந்து 2000 கிலோ கிராம் மாத்திரம் கொள்வனவு செய்வதால் எல்லா விவசாயிகளாலும் உரிய காலத்தில் நன்மையை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் முருகேசு சந்திரகுமார் சுட்டிகாட்டினார்.

இந்த விஜயத்தின் போது உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோருடன் அமைச்சின் உயரதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .