Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் இந்திய வீட்டுத்திட்ட கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு, அப்பகுதி மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்;.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெள்ளிக்கிழமை (27) வெள்ளாங்குளம் கணேசபுர கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்டு இந்திய வீட்டுத்திட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த போதே, அக்கிராம மக்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்கிராம மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இக்கிராம மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தமது சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் மீள் குடியேறிய மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் 75 வீடுகள் அமைக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
யானைக்காடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டுத்திட்டத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
வீடு, குடி நீர் மற்றும் மின்சாரம் வசதிகள் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டதே, தவிர வேறு எந்த வசதிகளும் எமக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக போக்குவரத்துச் சேவை, சீரான பாதைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காததால்; பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்;.
மேலும் அங்கு வாழ்ந்து வருபவர்களின் உறவினர்கள் பலர் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் யுத்தத்தினால் அங்கவீனமுற்றுள்ளனர். இந்நிலையில் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித தொழில் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.
தற்போது குறித்த வீட்டுத்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. வீட்டுச் சுவரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு கூரையும் உடைந்துள்ளது. சில வீடுகளின் பின் பகுதி நிலத்தினுள் புதைந்துள்ளது.
எனவே இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதியளித்துள்ளார்;.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago