Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 01 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வடமாகாண சுகாதார அமைச்சில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்புவதில் எவ்வித அரசியல் தலையீட்டுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப் பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் நீண்டகாலம் தொண்டர் அடிப்படையிலும் அமைய அடிப்படையிலும் பணியாற்றியவர்களை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கல்வித்தகைமை, வயதெல்லை போன்ற விடயங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. விரைவில் இவர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
எனினும், சிலர் இடைத்தரகர்களாக செயற்பட்டு நிரந்தர நியமனம் பெற்றுத்தருவதாக விபரங்களை திரட்டுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த நிரந்தரமாக்கல் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக அமைச்சினாலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதில் எந்தவித அரசியல் செல்வாக்குக்கும் இடமளிக்கப்படமாட்டாது. இதற்காக யாரையும் இடைத்தரகர்களாக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பில் பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் தலைமை பணிமனையுடனோ அல்லது வவுனியாவிலுள்ள அமைச்சின் உப பணிமனையுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago