2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 02 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

உலக வங்கியின் நிதியுதவியில் முல்லைத்தீவு துணுக்காய் சண்முகரத்தினம் வித்தியாலயம் மற்றும் துணுக்காய் வலயக் கல்வி பணிமனையில் அமைக்கப்பட்ட கட்டங்கள், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினால் திங்கட்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டன.

43.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட துணுக்காய் சண்முகரத்தினம் வித்தியாலய கட்டடம் முழுமையடைந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் 50 மில்லியன் ரூபாய் செலவில் கட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு, 13 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிகுதி கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.லூட்ஸ் மாலினி வெனிற்ரன், வடமாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், சி.சிவமோகன், திருமதி மேரிகலா குணசீலன், து.ரவிகரன், துணுக்காய் பிரதேச செயலாளர் சி.குணபாலன் மற்றும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .