Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 05 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதியன்று மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை(4) மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆகாஸ் கொட்டலில் இடம் பெற்றது.
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், இந்திய துணைத் தூதரகத்தின் அரசியல் பிரதிநிதி எஸ்.டி.மூர்த்தி ஆகியோருக்கு இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மன்னாருக்கு வருகை தரும் போது அவரை வரவேற்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்துடன் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட மகஜரொன்றை இந்தியப்பிரதமரிடம் கையளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
35 minute ago