Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 05 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சில முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் நலன் சாராத சில விசமிகள் செயற்பட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாந்தை கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுமுறிப்பு, சிராட்டிக்குளம், செல்வபுரம் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
இது தொடர்பில் அந்த சங்கங்கள் கூறியுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற மாந்தை கிழக்கு பிரதேசம், போக்குவரத்து வசதிகள் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாத பிரதேசமாக காணப்படுகின்றது. இதனால்; இந்த பிரதேசங்களுக்கு சேவையாற்றுவதற்கு கூடுதலானவர்கள் விரும்புவதில்லை. 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் இப்பிரதேசத்துக்குரிய ஒரேயொரு வைத்தியசாலையாக நண்டாங்கண்டல் வைத்தியசாலை, வைத்தியர்கள் எவரும இல்லாது நீண்டகாலமாக இயங்கி வந்தது.
2013ஆம் ஆண்டு அங்கு சேவையாற்றிய வைத்தியரை அங்கிருந்;து வெளியேற்றுவதற்கு, சுயநலங்கொண்ட ஒரு சிலர் அவருக்கெதிராக பல்வேறு செயற்பாடுகளை மறைமுகமாகச் செய்து அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றினார்கள்;. மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் மீள்குடியேற்றத்தின் பின்னர் 2013ஆம் ஆண்டு வரைக்கும் பிரதேச செயலாளர் இன்றி இயங்கி வந்தது.
இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள மக்கள், துணுக்காய், ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பதில் பிரதேச செயலாளர்களிடம் தங்கள் தேவைகளைப் பெற வேண்டியிருந்தது. 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் சேவையாற்;றி வரும் பிரதேச செயலாளருக்;கு எதிராக மக்கள் அபிவிருத்தியை விரும்பாத சிலர், பிரதேச செயலர் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசமத்தனமான செயற்;பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட எதிர்கால அபிவிருத்தியை நோக்கி முன்;னேறிக்கொண்டிருக்கின்ற தமது கிராமங்களினதும் வறிய மக்களினதும் நலன்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறான விசமிகளுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
5 hours ago