Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 06 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சட்டரீதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் வெள்ளக்கிழமை (06) தெரிவித்தார்.
முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் பிரதேச சபை, சுற்றுச்சூழல் அனுமதி எவையுமின்றி முன்னைய அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் ஒருவர் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் சட்டரீதியற்ற முறையில் ஐஸ்கட்டி தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மாவட்டச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்தார். சில அதிகாரிகள் கையூட்டல்கள் பெற்றுள்ளதாகவும் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், 'சட்டரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் யாவும் எம்மால் நிறுத்தப்படும். அதில் எந்தவித பிரச்சனைகளும் இல்லை. கையூட்டல் பெற்றவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் கூறினார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, குழந்தைகள் விடுதி மற்றும் பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட பற்சிகிச்சை நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்டச் செயலாளர் கூறியதாவது,
"முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலே புதுக்குடியிருப்பு ஓர் முக்கியமான பிரதேசமாகும். பல திட்டங்கள் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதிகள் இறுதியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கமுடியாமல் போனது கவலைக்குரிய விடயம்.
2012ஆம் ஆண்டு இந்த வைத்தியசாலை பகுதி விரைவாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வைத்தியசாலையை எதிர்காலத்தில் தரமுயர்த்தப்படும் நோக்கில் வேறு இடத்தில் காணி வழங்கப்பட்டுள்ளது.
எமது மாவட்டம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதும் பல்வேறு தேவைகள் இன்னமும் நிறைவு செய்யப்படவேண்டியுள்ளது. குறிப்பாக கல்வி, சுகாதார வசதிகள் எமது மக்களுடைய வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் நிறைய தேவைகள் உள்ளன.
அவற்றை தொடர்ந்து செய்யக்கூடிய ஓர் வசதியான சூழல் உள்ளது. முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்;னெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கின்றேன். மத்திய, மாகாண அரசுகள் இணைந்து செயற்படும் போது, முழுமையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago