Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 07 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் உயிலங்குளத்திலிருந்து மன்னார் தீவுப்பகுதிக்கு இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளை விசேட அதிரடிப்படையினர், உயிலங்குளத்துக்கு திருப்பி அனுப்பிய சம்பவமொன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மன்னார் நகர பகுதியிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றுக்கு, மன்னார் உயிலங்குளம் கிராமத்திலிருந்து சிலர் 7 மாடுகளை கொண்டு சென்றுள்ளனர்;.
இதன்போது வங்காலை பிரதான வீதியில் நின்ற விசேட அதிரடிப்படையினர் மாடுகளை கொண்டு வந்தவர்களுடன்; வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மன்னாரில் இனி மாடு வெட்ட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த மாட்டு இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இறைச்சி நிலையத்தின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த உரிமையாளர், மன்னார் நகர சபையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி பெற்றே மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தை நடத்தி வருவதாகவும் இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை தனது அனுமதி; உள்ளதாகவும் மன்னார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸாரின் உத்தரவுக்கமைய மாடுகளை மீண்டும் உயிலங்குளத்திலிருந்து மன்னாருக்கு கொண்டுவந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago