2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சேமமடுக்குளம் புனரமைப்பால் 200 விவசாயிகளுக்கு பயன்

Menaka Mookandi   / 2015 மார்ச் 08 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா, சேமமடுக்குளம் 60 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டமையால் 200 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளதாக சேமமடுக்குள கமக்கரா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியதாவது,

'வவுனியா மாவட்டத்;தின் விவசாயக் கிராமமான சேமமடுக்குளம் பகுதியில் உள்ள சேமமடுக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் அதன் நீர்;ப்பாசன வாய்க்கால் அணைக்கட்டு என்பன சேதமடைந்;த நிலையில் காணப்பட்டது. இதனால், விவசாயச் செய்கைகள் பாதிக்கப்;பட்டு வந்ததுடன் சீரான நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியாத நிலையும் இருந்தது.

முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் அவசரகால கருத்திட்டத்தின்; கீழ் 60 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்துள்ளன.

குளத்தின் அணைக்கட்டு வான்பகுதி என்பன புனரமைக்;கப்பட்டதுடன் ஆயிரத்து 800 மீற்றர் நீளமான நீர்விநியோகம் வாய்க்கால் கொங்கிறிட் இட்டு புனரமைக்கப்பட்;டதுடன் ஏனைய வாய்க்கால்களும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

குளத்தின் கீழுள்ள 650 ஏக்கர் நிலப்பரப்புக்கு சீரான நீர்ப்பாசனம் மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளதுடன், 200 விவசாயிகள் நன்மையடைவார்கள்' என அந்த அமைப்புத் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .