Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 10 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், அரச பேரூந்துசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
மன்னார் அரச பேரூந்து சாலையின்(டிப்போ) தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்குக்கும் இடையில் திங்கட்கிழமை(9) மன்னார் டிப்போவில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மன்னார் டிப்போவில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மன்னார் டிப்போவின் தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக மன்னார் டிப்போவில் நிலவும் நீர் பற்றாக்குறை, மலவசக்கூடம் இன்மை, தங்குமிட வசதிகள் இல்லாமை மற்றும் டிப்போவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
தற்போது இயங்கி வரும் மன்னார் டிப்போவின் தொழிற்சங்க நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி போக்குவரத்துதுறை அமைச்சர் மன்னாருக்கு வருகை தரவுள்ள நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இதன்போது உறுதியளித்தார்.
குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago