Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 10 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பித்துள்ளது. இம்முறை மன்னார் மாவட்டத்தில் 18,100 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை பெரிய, சிறிய நீர்ப்பாசனம் மற்றும் மனாவரி ஆகிய 3 முறைகளில் நெற்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 60 சதவீதத்துக்கு மேல் வீ.ஜி 360 (கீரிசம்பா) செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்பயிர்ச் செய்கை அழிவடைந்தது. அதனையடுத்து விவசாய திணைக்களத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு மீண்டும் விவசாயிகளால் நெல் விதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலே தற்போது பெரும்போக நெற்பயிர்ச் செய்கை அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் கூலிக்கு ஆட்களை அமர்த்தி அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனால் பலர் வருமானத்தை தேடிக்கொண்டுள்ளனர். ஆனால் தற்போது இயந்திரங்களின் உதவியோடு அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago