2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் விசேட தேவையுடைய 650 மாணவர்கள் உள்ளனர்

Menaka Mookandi   / 2015 மார்ச் 10 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் விசேட தேவையுடைய 650 மாணவர்கள் கல்விகற்று வருவதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேள் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.

விசேட தேவையுடைய மாணவர்களுக்காக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த வகுப்புக்களில் 32 மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். மிகுதி மாணவர்கள் பாடசாலைகளில் கல்வி பயின்று வருகின்றனர்.  

கடந்த கால போர்ச்சூழல், இடப்பெயர்வுகள், நலன்புரி வாழ்வு என்பனவே கூடுதலான விசேட தேவையுடைய மாணவர்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான சிறார்களுக்கு  உதவியமைப்புகளின் உதவிகள் கூடுதலாக தேவைப்படுகின்றன எனக்கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .