2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மகளிர் எழுச்சி விழா

Sudharshini   / 2015 மார்ச் 10 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  மகளிர் எழுச்சி விழா முல்லைத்தீவு மாவட்டத்தில்  செவ்வாய்க்கிழமை (10) கொண்டாடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், முள்ளியவளை பாரதி இல்ல மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் பவானி, பால் மற்றும் பால்நிலை சமத்துவத்துவத்துக்கான முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பற்றீசியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .