Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மார்ச் 11 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கோணாவில் கிராமத்தினூடாக செல்லும் வீதியில் குளத்துடன் அமைந்துள்ள பாலம், விசேட திட்டத்தின் மூலம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், புதன்கிழமை (11) தெரிவித்தார்.
இந்த பாலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் உள்ளதால் இந்த பாலத்தினூடாக போக்குவரத்து செய்யும் வாகனங்களும் மக்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
1,100 குடும்பங்கள் வாழ்கின்ற கோணாவில் கிராமத்தின் முக்கிய பாலமாக இந்தப் பாலம் விளங்குகின்றது.
மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்தப் பாலம் இன்னமும் புனரமைக்கப்படாமல் இருக்கின்றது.
இது தொடர்பில் மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,
அக்கராயன்குளத்திலிருந்து வலதுகரை வாய்க்கால் ஊடாக கோணாவில் கிராமத்துக்கு நீர்செல்லும் வாய்க்காலுக்கு அருகில் இந்த பாலம் அமைந்துள்ளது. அக்கராயன்குளத்தின் வாய்க்கால்கள் புனரமைக்கப்படும்போது இந்த பாலம் புனரமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வீதி அபிவிருத்தித் திணைக்களமும் இப்பாலத்தை புனரமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்துக்கும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கும் இப்பாலத்தை புனரமைக்கவேண்டிய தேவையுள்ளது.
எனவே, விசேட திட்டத்தின் மூலம் இந்த பாலத்தை புனரமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
31 minute ago