Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 12 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நவீன வசதிகளைக்கொண்ட குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக நானாட்டான் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த தொகுதி நேற்று புதன்கிழமை (11) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட்டினால் வைபக ரீதியாக இந்த குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 49 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த நவீன வசதிகளைக்கொண்ட குளியலறை மற்றும் மலசல கூட தொகுதி நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கடந்த 23-05௨013 அன்று ஆரம்பிக்கப்பட்டு 22௧1௨013 அன்று நிறைவடைந்தது.
மக்களின் பயன்பாட்டுக்காக நானாட்டான் பிரதேச சபையிடம் குறித்த மலசல கூட தொகுதி கையளிக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்களை கடந்த நிலையில் நேற்று புதன்கிழமை (11) குறித்த தொகுதி திறக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
7 hours ago