2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பனை சார் உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார உதவி

Menaka Mookandi   / 2015 மார்ச் 13 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட பனை அபிவிருத்தி சபையால், முல்லைத்தீவைச் சேர்ந்த பனை சார் உற்பத்தியாளர்கள் 89 பேருக்கான வாழ்வாதார உதவிகள், மாங்குளத்தில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

பதநீர் உற்பத்தியாளர்கள் 45 பேருக்கு துவிச்சக்கரவண்டி மற்றும் பதநீர் உற்பத்திக்கான உபகரணங்களும் பனங்களி உற்பத்தியாளர்கள் 10 பேருக்கு பனங்களி எடுக்கும் உபகரணங்ளும் ஒடியல் உற்பத்தியாளர்கள் 34 பேருக்கு ஓடியல் சீவும் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.

பனை அபிவிருத்தி சபையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பா.றஜிபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்து இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .