Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 14 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி மேற்கு மற்றும் ஹிஜ்ராபுரம் ஆகிய இரு மீனவ கூட்டுறவு சங்கத்துக்கும் சொந்தமான இரண்டு வள்ளங்கள், வியாழக்கிழமை (12) தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக, முள்ளயவளை பொலிஸ் நிலையத்தில் இரு சங்கங்களின் தலைவர்களும் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு நந்திக்கடலில், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன் மற்றும் இறால் பிடிக்கும் மீனவர்களை பிடிப்பதற்கு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு, குறித்த சங்கத்தினர் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் மீனவ சங்கத்தினர் இணைந்து நந்திக்கடல் பகுதியில் ஒரு தொகை சட்டவிரோத வலைகளை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோத வலைகளைப் பறிமுதல் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மீனவ சங்கங்களுக்கும் சொந்தமான இரு வள்ளங்களும் மூன்றாம் கட்ட வடக்குவெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனை முதலப்பிட்டி பகுதிக்கு எடுத்துச் சென்று இனந்தெரியாத நபர்கள் தீவைத்துக் கொழுத்தியுள்ளதாக, நீராவிப்பிட்டி மேற்கு மீனவ சங்கத்தலைவர் அப்துல் ஹமீட் அன்சார் மற்றும் ஹிஜ்ராபுரம் மீனவ சங்கத்தலைவர் முத்து முஹம்மது லாபிர் ஆகியோர் தெரிவித்தனர்.
நந்திக்கடலில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்பவர்களை பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்களத்துக்கு உதவியமையினாலேயே, தங்களது வள்ளங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த 2 வள்ளங்களும் 2013ஆம் ஆண்டு இரு சங்கங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் இரு வள்ளகளின் பெறுமதி அப்போது 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடந்த மாதங்களாக தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்பட்டு மீன் மற்றும் இறால் பிடிக்கப்பட்டு வருவதாக வீச்சு மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதேவேளை, முல்iலைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினர் பொலிஸாரின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago