2025 ஜூலை 12, சனிக்கிழமை

மோடியிடம் மனு கொடுத்தார் மன்னார் ஆயர்

Thipaan   / 2015 மார்ச் 14 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாருக்கு விஜயம் செய்த இந்தியப்பிரதமர் மோடியிடம்  மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை மனு ஒன்றை கையளித்தார்.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி,  இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்த மகஜரின் பிரதியே மோடியிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், வடபகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் நிலம் உடமை, வடபகுதியின் இராணுவப்பிரசன்னம், போன்ற மிக முக்கியமான பிரச்சைனைகளுக்குத்தீர்வு காணுமாறு அந்த மகஜரில் கேட்கப்பட்டுள்ளது. 

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்மகஜர் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆயர் தெரிவித்தார்.

இதன்போது, கையளிக்கப்பட்ட குறித்த மகஜரில் 16 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .