2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 5 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம்

George   / 2015 மார்ச் 15 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஐந்து கிராமங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கும் நிகழ்வு, மின்வலு இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் தலைமையில் சனிக்கிழமை(14) இடம்பெற்றது. 

மணவாளன்பட்டமுறிப்பு, தட்டார்மலை, புளியங்குளம், வித்தியாபுரம், கூழாமுறிப்பு ஆகிய கிராமங்களுக்கே மின்விநியோகம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய இராஜங்க அமைச்சர், ஒரு வீட்டுக்கு மின்சாரம் வழங்குவதற்கு 1 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் வழங்கப்படுவதன் ஊடாக பிள்ளைகள் தங்கள் கல்வியை முறையாக கற்கலாம்.

கடந்த காலத்தில் போரினால் பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ள கிராமங்களுக்கே இன்று மின்சாரம் வழங்கப்படுகின்றது. 

இப்பகுதியில் காணப்படுகின்ற குறைகளை எனக்குத் தெரியப்படுத்தினால் அக்குறைகளை  எதிர்காலத்தில் இல்லாமல் செய்வதற்கான வழிகளை உருவாக்குவேன் என்றார். 

ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளர் றோகண கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச அமைப்பாளரும், றோகண கமகேயின் இணைப்பாளருமான முத்துச்சாமி முகுந்தகஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .