Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 15 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீனவத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த கடலில் தற்போது இறால்பிடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வீச்சு வலைகளைப் பயன்படுத்தி, இந்த இறால்பிடி மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், முல்லைத்தீவிலுள்ள மூன்று மீன்பிடிச் சங்கங்களின் அங்கத்தவர்களான ஒருசில மீனவத் தொழிலாளர் இவ்வாறு நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இறால் பிடிப்பதாகவும் இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் நந்திக்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பகல் மற்றும் இரவு நேரங்களில் தொழில் செய்யும் பல மீனவத் தொழிலாளர்களையும் அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட வலைகள் என்பவற்றை கடற்தொழில் திணைக்களம், பொலிஸார் மற்றும் மீனவர்களின் ஒத்துழைப்புக்களுடன் கைப்பற்றி வருகின்ற போதிலும் இந்த நடவடிக்கை தொடர்ந்துகொண்டே செல்வதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், மாவட்ட கடற்தொழில் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் மீனவ சங்;கங்களை ஒன்றுகூட்டி இவ்வாறு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழில் செய்யக்கூடாது எனவும், மீறி தொழில் செயபவர்களின் அங்கத்துவம் நீக்கப்படும் என கட்டளையிட்டால் இந்தப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என நந்திக்கடல் மீனவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்பவர்களை பிடிப்பதற்காக கடற்றொழில் திணைக்களத்தின் உதவியுடன் பயன்படுத்தப்பட்ட முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் மற்றும் நீராவிப்பிட்டி மேற்கு ஆகிய மீனவ சங்கங்களுக்கு சொந்தமான இரு வல்லங்கள் கடந்த வாரம் வியாழக்கிழமை முதலப்பிட்டி எனும் இடத்தில் இனந்தெரியாதவர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
3 hours ago
7 hours ago