Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 15 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, அடப்பங்குளம் கிராமத்துக்கான அடிப்படை வசதிகளை பெற்றுத் தருமாறு கோரி ஞாயிற்றுக்கிழமை (15) அடப்பங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடப்பட்டனர்.
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமது கிராமத்துக்கான அடிப்படை வசதிகளை பெற்றுத்தர வேண்டும், பிரதேச பொது கட்டடத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும், சமுர்த்தி முத்திரை வழங்கலில் பாரபட்சம் காட்டக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
நேரியகுளத்திலிருந்து ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள், அடப்பங்குளம் வரை சென்று அங்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரமாக இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago