2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'புதிய அரசாங்கம் வல்லமையுள்ளது'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

புதிய அரசாங்கம் வல்லமையுள்ள அரசாங்கமாக உள்ளது என்று  மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்; மன்னார் விஜயம் எவ்வாறு அமைந்தது என்பது தொடர்பில்  அவரிடம்  நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை மாலை  கேட்டபோதே இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'வட,  கிழக்கில் உள்ள மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளார்கள். அவ்வாறான மக்கள் இந்தியப்  பிரதமரின் வருகையினால்,  தற்போது நம்பிக்கையை பார்க்கிறார்கள். தற்போது புதியதொரு பாதை திறக்கப்படுகின்றது. இலங்கை முழுவதுமாக நாம் பயணிக்கப்போகின்றோம்.

புதிய அரசாங்கம் வல்லமையுள்ள அரசாங்கமாக இருக்கின்றது. நல்லவற்றை செய்யும் அரசாங்கத்துக்கே தமிழ்,  முஸ்லிம்  மக்கள் வாக்களித்தார்கள்.  அதேபோல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அனைவரும் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அதாவது, அரசாங்கத்துடன் யாரெல்லாம் கரம் கோர்க்கப்போகின்றார்களோ, அதிலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கரம் கோர்த்து நிற்கும் என்பதால், கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களை வலுப்படுத்தி இணைந்து செயற்பட செய்யவேண்டும்.

உண்மைக்கும் நீதிக்கும் தம்மை அர்ப்பணிக்கும் இந்த அரசாங்கத்துக்கு, இந்தியாவையும் தமது கரங்களில் வைத்து நேர் பார்வையில் பயணிக்கும் இந்த அரசாங்கத்துக்கு  எமது மக்கள் சன்மானம் அளிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .