Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 18 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
புதுக்குடியிருப்பு மத்திய பகுதியிலுள்ள 19 ஏக்கர் காணியையும் அக்காணிகளுக்குள் அமைந்துள்ள வீடுகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் எனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (17), பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மேற்படி காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக புக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குள் செல்ல முயன்ற காணி சுவீகரிப்பு அதிகாரிகளை செயலகத்துக்குள் செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தடுத்தனர். இதனால், காணி சுவீகரிப்பு பணிகளுக்காக வந்திருந்த அதிகாரிகள், தங்களை பணிகளை கைவிட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.
புதுக்குடியிருப்பிலுள்ள பொதுமக்களின் காணிகள், வீடுகள் மற்றும் பொதுவிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்திரை வெளியேற்றி காணிகளையும் வீடுகளையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும்படியும் குறிப்பாக முல்லைத்தீவு, கேப்பாப்புலவு கிராமத்திலிருந்து இராணுவத்தினரும் கடற்படையினரும் வெளியேறி கிராமத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் புதுக்குடியிருப்புக்கு அண்மையில் வருகை தந்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் மக்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
22 minute ago