2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

125 ஏக்கரில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ள தீர்மானம்

George   / 2015 மார்ச் 18 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தின் கீழ் 125 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கரைச்சி பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை தெரிவித்தார். 

வன்னேரிக்குளத்தின் கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுடனான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை(17) வன்னேரிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், விவசாயிகள் சட்டதிட்டங்களை நன்கு மதித்து செயற்படவேண்டும். விவசாயிகள் ஒற்றுமையாக பயிர்ச்செய்கையில் ஈடுபடவேண்டும். விவசாயத்திலுள்ள சட்டதிட்டங்களை மதித்து விவசாயத்தில் ஈடுபடும் போது தான் சிறந்த பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார். 

கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ச.பி.அமல்ராஜ் ஆகியோரும்; இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .