2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா, மாணிக்கப்போடி சசிகுமார்

கிளிநொச்சி,  புதுக்காட்டுச் சந்தியில் புதன்கிழமை (18) அதிகாலை லொறியொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாதில் லொறியின் சாரதியும் உதவியாளரும்  சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளர் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் உரிமையாளரும் சாரதியுமான இரத்தினசிங்கம் தர்மசிங்கம் (வயது 51), ஆவரங்காலைச் சேர்ந்த தெய்வம் ரங்கநாதன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு தம்புள்ளைக்கு சென்றுகொண்டிருந்த லொறியின் முன் சில்லு ரயர் வெடித்ததாலேயே,  லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியது.

இருவரது சடலங்களும் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .