Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், நீதிமன்றத்தால் விதிக்கப்படும் சமுதாயச் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற தண்டனையை உதாசீனம் செய்தால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சமுதாயசார் உத்தியோகத்தர் கே.எம்.றஜீம் புதன்கிழமை (18) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், மீண்டும் குற்றமிழைக்கக்கூடாது என்பதற்காகவும் சமுதாயத்தில் நற்காரியங்களை செய்யவேண்டும் என்பதற்காகவும் இந்தத் தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்றது.
இந்தத் தண்டனையை பெற்றவர்கள் பொது இடங்களை துப்பரவு செய்தல், ஒழுங்கமைத்தல் போன்ற சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிலர் இந்தத் தண்டனையை உதாசீனம் செய்து வருகின்றனர். வழங்கப்பட்ட தண்டனைக்கு ஏற்ப இவர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லாதுவிடின் வழங்கப்பட்ட தண்டனையைவிட இரட்டிப்புத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 பேரும் சமுதாய சீர்திருத்த தண்டனையை பெற்றுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 96 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 109 பேரும் இந்த தண்டனையைப் பெற்றதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
7 hours ago