2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பள்ளமடு - மகிலங்குளம் பிரதான வீதி புனரமைப்புக்கு ரூ.457 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு -மகிலங்குளம் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று (19) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியில் இருந்து மகிலங்குளம் வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் கொண்ட பகுதியே புனரமைப்பு செய்யப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை(19) மதியம் இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன், சிறப்பு விருந்தினர்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், கௌரவ விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்க்கான் பதியுதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உற்பட பலர் கலந்துகொண்டு குறித்த வீதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .