Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 20 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா வைத்தயிசாலையில் விசேட தேவைக்குரியோருக்கான விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாய்பேச முடியாது, காது கேட்காதவர்கள் மற்றும் கண் பார்வையற்றவர்கள் வைத்தியசாலையில் தமது தேவைகளை தாமாகவே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சைன் மொழியிலான வழிகாட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பொது வைத்தியசாலையின் வரவேற்பாளர் இடத்தில் தொலைக்காட்சி பெட்டி நிறுவப்பட்டு, இதனூடாக இவ் வழிகாட்டல்கள் இடம்;பெற்று வருகின்றன. இவ்வாறான தகவல் அவர்களுக்கு போதுமானதாக இல்லாவிட்டால் வரவேற்பாளருக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் விசேட தேவைக்குரியோருக்கான மேலதிக வழிகாட்டல் மற்றும் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வைத்தியசாலையில் 12 இற்கும் மேற்பட்ட அபிப்பிராயப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரடியாக கூற முடியாத பட்சத்தில் அதனுல் எழுத்தி போட முடியும்.
அதேவேளை வைத்தயிசாலையின் நல்ல விடயங்களையும் சுட்டிக்காட்டுவதுடன் மேலும் வைத்தயிசாலையின் மேம்பாட்டுக்கு தேவையான கருத்துக்களையும் வழங்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago