2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாய் சுகாதார சர்வதேச தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வாய் சுகாதார சர்வதேச தினம், மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (20) அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் வாய் சுகாதார விழிர்ப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் இடம்பெற்றது. 

காலை 8 மணயளவில் குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து, மீண்டும் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினை சென்றடைந்தது. 

ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் வாய் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். 

ஊர்வலத்தை தொடர்ந்து, மன்னார் நகர சபை மண்டபத்தில் விசேட நிகழ்வும் இடம்பெற்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்ரன் சிசில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி அன்ரன் சிசில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் உட்பட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .