2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் ரிஷாட் பதூர்தீனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 மார்ச் 20 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நீதிமன்றத்தின்  முன்னாள் நீதவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் ரிஷாட் பதூர்தீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை,  மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா ஆசீர்வாதம் கிறேசியன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை(19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது,  சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளும் முகமாக விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது அமைச்சர் ரிஷாட் பதூர்தீனும் மன்றில் ஆஜராகியிருந்தார்.

மன்னார் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.யூட்சனை,  அமைச்சர் ரிஷாட் பதூர்தீன், 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி  தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுத்தார் என்று, அமைச்சருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த நிலையில் மீண்டும் நேற்று வியாழக்கிழமை(19) மன்னார் நீதிமன்றில் மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா ஆசீர்வாதம் கிறேசியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததோடு ஜுன் மாதம் 08ஆம் திகதி, சட்டமா அதிபரின் அறிக்கையை மன்றில் சமர்பிக்க வேண்டும் என பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .