2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்க கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள், நிரந்தர நியமனம் வழங்க கோரி இன்று (21) காலை வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரசபையில் சுகாதார தொழிலாளர்களாக பணியாற்றும்; 7 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரியே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, 7 சுகாதார ஊழியர்களுக்கும் நியமனம் வழங்கப்படும் என பல தடவைகள் வட மாகாண அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினால்  உறுதி வழங்கப்பட்ட போதும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்காது விட்டால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு சார்பாக ஏனைய சுகாதார தொழிலாளர்களும் பங்கேற்றிருந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்குள் செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதையடுத்து, அங்கு பிரசன்னமாகியிருந்த வட மாகாண சுகாதார அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது இவ்விடயம் தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சராகவுள்ள வட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி நல்ல முடிவினை மிக விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .