Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 22 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- யோ.வித்தியா
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், நேரசூசி ஒதுக்கீட்டை தரும்வரையில் புதிய பஸ்கள் எவையும் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் எஸ்.ஜீவாநந்தன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி –முல்லைத்தீவு வழிதடத்தில் தனியார் பஸ் மற்றும் போக்குவரத்துச் சபை பஸ்களுக்கிடையில் நீண்டகாலமாக பிரச்சினை இருக்கின்றது. இதனால், இரண்டு தரப்பினரும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக பல தடவைகள் மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டுள்ளோம். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மேற்படி வழித்தடத்தில், போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையால் பாடசாலை மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த பஸ் சேவை மிகவும் அவசியமானது. பிணக்குகள் ஏற்பட்டதன் காரணமாக இந்த வழித்தட பஸ் சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எமது சாலைக்கு 4 புதிய பஸ்கள் கிடைத்துள்ளன. அந்த பஸ்களை மாவட்டச் செயலாளர் நேரசூசி பெற்றுத்தரும் வரை சேவையில் ஈடுபடுத்தப்போவதில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago