Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 22 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூராய் கிராமத்தில் தென்பகுதியைச் சேர்ந்த நபரால் சட்டவிரோத மணற்கொள்ளை இடம்பெற்று வருவதாக விசனம் தெரிவிக்கும் மக்கள், குறித்த மணல் கொள்ளையை முற்றாக நிறுத்தக்கோருகின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மணற்கொள்ளை, அரசியல் தலையீடு காரணமாக வெளிப்படையாகவே நடைபெற்று வந்தது. மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால் குறித்த மணல் கொள்ளை சிறிதுகாலம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நல்லாட்சி என்னும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் மணற்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தென்பகுதியை சேர்ந்த நபருக்கு மணல் அகழ்வு செய்வதற்கான அனுமதி, வேறு இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் ஏற்கெனவே தொடர்ச்சியாக மணல் அகழ்வு செய்து அங்கு அகழ்வதற்கு போதிய அளவு மணல் இல்லாததால் கூராய்கிராமத்தில் பறங்கி ஆறு பகுதியில் சட்டவிரோத மணற்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு இலுப்பக்கடவை பொலிஸாரின் ஒத்துழைப்பும் அரசியல்வாதிகளின் ஆதரவும் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பறங்கி ஆற்றுப்பகுதியில் மணற்கொள்ளை தொடர்பான வழக்கு நடைபெற்று, அப்பகுதியில் மண் அகழ்வு செய்ய நீதிமன்றம் தடைவிதித்திருந்ததாகவும் ஆனால், காட்டுப்பகுதியினூடாக வேறு பாதை அமைத்து அவ்வழியாக தொடர்ந்தும் மணற்கொள்ளை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தின் வீதிகள் கிறவல்மண் வீதிகளாகவும் மிக ஒடுக்கமான வீதிகளாகவும் காணப்படுகிறன. இவ்வீதியூடாக மணற்கொள்ளையில் ஈடுபடும் டிப்பர்கள் மிக வேகமாக செல்லுகையில் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதுடன் வீதியும் சிதைவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஒருநாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட மணல் அகழ்வினைப் பார்க்கிலும் அதிக அளவில் மணற்கொள்ளையிடப்படுவதால் இக்கிராமம் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே, குறித்த மணற்கொள்ளையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்துமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
3 hours ago
7 hours ago