2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம்

Princiya Dixci   / 2015 மார்ச் 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திரா, செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சட்டவிரோத மணல் கடத்தல், காட்டு மரங்கள் தறித்தல், கசிப்பு உற்பத்தி, கால்நடைத் திருட்டு மற்றும் அனுமதிப் பத்திரமின்றி மதுபானம் விற்பனை ஆகியன கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ளன.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டு, சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறும் இடங்களென அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்போது, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர்.

கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்புக்கள் மூலம் கிராமங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .