2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற 5,464 பேருக்கான, காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

இதன்போது, வவுனியா வடக்கு, வவனியா தெற்கு, செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவுகளை சேர்ந்த 5,464 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வட மாகாண சபை உறுப்பினர்கள், வட மாகாண காணி ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .