2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'கிராமங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவேன்'

Princiya Dixci   / 2015 மார்ச் 25 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களின் வளர்ச்சியில் கூடிய அக்கறை செலுத்துவேன் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக புதன்கிழமை (25) கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'கிளிநொச்சி மாவட்டத்தில் பல பின்தங்கிய கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்களில் அபிவிருத்தியும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றமும் முக்கியமானது. அதில் அதிக அக்கறை செலுத்தி செயற்படுவேன். முன்னர் இங்கு கடமையாற்றிய ரூபவதி கேதீஸ்வரன் சிறப்பாக தனது கடமைகளை கிளிநொச்சி மாவட்டத்துக்கு வழங்கியிருந்தார். அவரைப்போல சிறந்த பணிகளை செய்வேன்.'

'ஆசிரியராக களுத்துறையில் கடமையாற்றிய நான், இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு, உதவித் தேர்தல் ஆணையாளராகவிருந்து தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கின்றேன்' என்று கூறினார். 

கிளிநொச்சி மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இடமாற்றம் பெற்றுச் சென்ற இவ் மூவரும் தங்கள் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (25) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .